Advertisement

கழுத்தை சுற்றியுள்ள கருமை நிறம் போக வேண்டுமா! இதோ உங்களுக்கான டிப்ஸ்!!!

By: Nagaraj Thu, 03 Dec 2020 4:15:20 PM

கழுத்தை சுற்றியுள்ள கருமை நிறம் போக வேண்டுமா! இதோ உங்களுக்கான டிப்ஸ்!!!

கழுத்தை சுற்றியுள்ள கருமை நிறத்தை போக்க இயற்கை முறையில் எளிய வழிகள் உங்களுக்காக.

பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு கழுத்தை சுற்றி கருமை நிறம் படர்ந்து காணப்படுவதை கண்கூடாகப் பார்க்க முடியும். நகைகள் அணிவது, உடல் சூடு, அலர்ஜி இவையே இதற்கான அடிப்படைக் காரணங்கள். இந்த பிரச்சினையை மிக எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே போக்கி விடலாம்.

உருளைக்கிழங்கை தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக அரிந்து அரைத்து, சாறு எடுத்து, கழுத்தை சுற்றி தேய்த்து வர நாளடைவில் கருமை மறைந்து தோலின் உண்மையான நிறம் தெரியத் தொடங்கும்.

neck darkening,glitter,lemon juice,honey ,
கழுத்து கருமை, மினுமினுப்பு, எலுமிச்சை சாறு, தேன்

இதேபோல் பாதி எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், கழுத்தில் உள்ள கருமை அகலும்.
வெள்ளரிக்காய் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். எனவே வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.
பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் - இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும். முட்டைக்கோஸை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம்.
இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

Tags :