Advertisement

முகம் கண்ணாடியாக ஒளிர வேண்டுமா? இந்த இயற்கை குறிப்பை முயற்சி பண்ணுங்க!

By: Monisha Wed, 16 Dec 2020 10:50:19 AM

முகம் கண்ணாடியாக ஒளிர வேண்டுமா? இந்த இயற்கை குறிப்பை முயற்சி பண்ணுங்க!

சருமத்தை எப்போதும் வெண்மையாக வைத்துக் கொள்ள சில இயற்கையான வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் போதும். வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இவற்றை நாம் செய்யலாம். இதனால் கரும்புள்ளிகள் மறையும்; பருக்கள் ஓடிப் போகும்; சருமம் இறுகி மிருதுவாகும். இந்த பதிவில் சருமம் வெண்மையாக சில இயற்கை முறைகளை பார்ப்போம்.

உலர்ந்த ஆரஞ்சு தோல் மற்றும் தயிர் ஆகியவை நம் வீட்டில் எளிதாகக் கிடைக்கக் கூடியவை தான். ஆரஞ்சு தோலை பொடி செய்து, சூரிய ஒளியில் நன்றாக உலர வைத்து, காற்றுப்புகாத சிறு பெட்டியில் அடைத்து வையுங்கள். பின் ஒரு ஸ்பூன் ஆரஞ்சுத் தோலுடன் தயிரைக் கலந்து, அந்தப் பேஸ்ட்டை முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் வரை காய விட்டு, பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் முகம் கண்ணாடியாக ஒளிரும்.

beauty,face,natural,coconut oil,orange peel ,அழகு,முகம்,இயற்கை,தேங்காய் எண்ணெய்,ஆரஞ்சு தோல்

தினமும் உங்கள் முகத்திலும் சருமத்திலும் தேங்காய் எண்ணெயைத் தடவி வந்தாலே போதும். விரைவில் இது உங்கள் சருமத்திற்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

2 ஸ்பூன் பச்சை பயறு மாவுடன், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு அல்லது தயிரைக் கலந்து, முகத்தில் மாஸ்க் செய்யவும். சுமார் 25 நிமிடங்கள் கழித்து, மாஸ்க்கைக் களைந்து விட்டு குளிர்ந்த நீரில் கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.

ஒரு ஸ்பூன் பால், தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை நன்றாகக் கலந்து கொள்ளவும். பின், அந்தப் பேஸ்ட்டை முகத்திலும் கழுத்திலும் தடவி, 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து, சாதாரண நீரில் கழுவினாலே போதும். வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து விடும். சருமமும் மிருதுவாகும்.

Tags :
|
|