Advertisement

வயதாகும் போது சரும சுருக்கம் ஏற்பட முக்கிய காரணம் என்ன?

By: Monisha Fri, 07 Aug 2020 5:25:15 PM

வயதாகும் போது சரும சுருக்கம் ஏற்பட முக்கிய காரணம் என்ன?

பொதுவாக ஒரு மனிதன், தனது 35 வயது வரை அவன் என்ன‍ சொல்கிறானோ அதை அப்ப‍டியே அவனது உடல், கேட்டு செயல்படும். நாற்பது வயதை நெருங்கும் போது அவன் என்ன‍ சொன்னாலும், அவனது உடல் கேட்டு செயல் பட தடுமாறும் அதேபோல் ஐம்பது வயதை நெருங்கும்போது அவனது உடல் என்ன‍ சொல்கிறதோ அதையே அவன் கேட்டு செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதில் பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

ஒரு பெண், 50 ஆவது வயதை தொடும்போது, சந்திக்கும் அழகியல் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்றான சருமப் பிரச்சினை எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

wrinkles,women,beauty,health,insulin ,சரும சுருக்கம்,பெண்கள்,அழகு,ஆரோக்கியம்,இன்சுலின்

பெண்ணின் உடலில் இன்சுலின் அளவுக்கு அதிகமாக சுரப்ப‍தும் அவர்களுக்கு சரும சுருக்கம் ஏற்பட முக்கிய காரணம். மேலும் பலமுறை பயன்படுத்திய எண்ணெய்யில் தயாரிக்க‍ப்பட்ட‍ உணவுகள், துரித உணவுகள், மைதா கொண்டு தயாரிக்க‍ப்பட்ட‍ பலகாரங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் இனிப்பு பலகாரங்கள் ஆகியவை சருமப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் சர்க்கரை அளவுக்கு அதிகமாக இருப்ப‍தால் 50 வயதை கடந்த பெண்கள், இவற்றை அதிகமாக‌ சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள‍ வேண்டும். மீறி சாப்பிட்டால் அவர்களின் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல சருமம் சுருக்க‍ம் ஏற்பட்டு அவர்களின் மேனி அழகு சீர்குலையுமாம்.

Tags :
|
|
|