Advertisement

இந்தியாவில் நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் 4ஜிபி வேரியண்ட் அறிமுகம்!

By: Monisha Mon, 22 June 2020 4:49:32 PM

இந்தியாவில் நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் 4ஜிபி வேரியண்ட் அறிமுகம்!

இந்தியாவில் கடந்த மாதம் ரியல்மி பிராண்டு அறிமுகம் செய்த நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் 4ஜிபி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி வேரியண்ட் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

தற்சமயம் நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மெமரி தவிர இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ரியல்மி நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

india,norzo 10a,smartphone,4gb,android ,இந்தியா,நார்சோ 10ஏ,ஸ்மார்ட்போன்,4ஜிபி,ஆண்ட்ராய்டு

புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் ஸ்மார்ட்போனின் பின்புறம் ஸ்கிராட்ச் ப்ரூஃப் டெக்ஸ்ச்சர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, ரிவர்ஸ் சார்ஜிங், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரியல்மி நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட் விலை இந்தியாவில் ரூ. 9999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

Tags :
|
|