Advertisement

சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 83.63 ரூபாய்க்கு விற்பனை

By: Monisha Tue, 30 June 2020 10:57:29 AM

சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 83.63 ரூபாய்க்கு விற்பனை

சர்வதேச சந்தையில் கடந்த மார்ச் 16-ம் தேதி கடைசியாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸ் பரவல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி போன்றவற்றால் விலையில் எந்த மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.

இந்நிலையில், பல நாடுகளில் பொருளாதார நடவடிக்கை வேகமெடுத்து இருப்பதால், பெட்ரோலியக் கச்சா எண்ணெய்க்கான தேவை திடீரென அதிகரித்துள்ளது. இதனால், 82 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 83.63 ரூபாய்க்கு விற்பனையானது. டீசல் லிட்டர் ஒரு லிட்டர் 77.72 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று, விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.

Tags :
|
|
|