Advertisement

மீண்டும் 37 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை

By: Monisha Thu, 03 Dec 2020 12:44:28 PM

மீண்டும் 37 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்கள் முன்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

தங்கம் விலையில் சில வாரங்களாக ஏற்றத்தாழ்வு காணப்பட்டு வந்த நிலையில் கடந்த 21-ந்தேதி பவுன் சவரன் மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின் விலையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டு 36 ஆயிரத்திற்குள் வந்தது.

gold,pound,price,rise,sale

தற்போது இரண்டு நாட்களாக மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 37 ஆயிரத்து 128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 641 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து 67 ரூபாய் 30 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|
|
|
|