Advertisement

சிறப்பு விற்பனையில் அதிகம் வருவாய் ஈட்டிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்!

By: Monisha Fri, 23 Oct 2020 6:48:36 PM

சிறப்பு விற்பனையில் அதிகம் வருவாய் ஈட்டிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் இதர ஆன்லைன் விற்பனையாளர்கள் அசத்தல் சலுகைகளுடன் சிறப்பு விற்பனையை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற பண்டிகை கால விற்பனையில் இந்த நிறுவனங்கள் சுமார் ரூ. 47 ஆயிரம் கோடி வருவாயை அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஈட்டும் என நுகர்வோர் செலவீனம் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் கணித்து இருக்கிறது.

amazon,flipkart,special sales,profit,revenue ,அமேசான்,ப்ளிப்கார்ட்,சிறப்பு விற்பனை,லாபம்,வருவாய்

மேலும் இந்த தொகையில் கிட்டத்தட்ட 75 சதவீதம் அதாவது ரூ. 35,400 கோடிகள் அக்டோபர் 15 முதல் அக்டோபர் 21 வரையிலான காலக்கட்டத்தில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையிலேயே நுகர்வோர் செலவு செய்து இருக்கலாம் என தெரிவித்து இருக்கிறது.

சமீபத்திய ஆன்லைன் விற்பனைகளில் சுமார் 5.5 முதல் 6 கோடி பயனர்கள் கலந்து கொண்டிருப்பர் என்றும், இந்த ஆண்டு பண்டிகை கால விற்பனை அதிகபட்சம் 34 சதவீத வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் அதிகம் விரும்பப்படும் சாதனமாக இருக்கிறது.

Tags :
|
|