Advertisement

புதிய போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல்!

By: Monisha Fri, 06 Nov 2020 6:45:35 PM

புதிய போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல்!

பிஎஸ்என்எல் நிறுவனம் டிசம்பர் 1 ஆம் தேதி புதிய போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 798 மற்றும் ரூ. 999 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இரண்டு புதிய சலுகைகளிலும் டேட்டா மற்றும் டாக்டைம் தவிர பல்வேறு இதர பலன்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய சலுகைகள் தவிர ரூ. 199 போஸ்ட்பெயிட் சலுகை மாற்றம் செய்யப்பட்டு டேட்டா ரோல்ஓவர் பலன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எஸ்என்எல் ரூ. 798 போஸ்ட்பெயிட் சலுகை நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் அறிவிக்கப்பட இருக்கிறது.

bsnl,postpaid,offer,data,talktime ,பிஎஸ்என்எல்,போஸ்ட்பெயிட்,சலுகை,டேட்டா,டாக்டைம்

இந்த சலுகையில் மாதம் 50 ஜிபி டேட்டா, 150 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் வசதி, தினமும் 100 எஸ்எம்எஸ், இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு ஆட் ஆன் இணைப்புகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 999 சலுகையில் மாதம் 75 ஜிபி டேட்டா, 225ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் வசதி, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் மூன்று குடும்ப உறுப்பினர்களுக்கு ஆட் ஆன் இணைப்புகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Tags :
|
|
|