Advertisement

சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான அக்கவுண்ட்களை அதிரடியாக நீக்கிய பேஸ்புக் நிறுவனம்

By: Karunakaran Sat, 07 Nov 2020 1:57:28 PM

சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான அக்கவுண்ட்களை அதிரடியாக நீக்கிய பேஸ்புக் நிறுவனம்

சமூக வலைத்தளமான பேஸ்புக் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் உலகம் முழுக்க 1196 அக்கவுண்ட்கள், 994 தீங்கு விளைவிக்கும் அக்கவுண்ட்ளை இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து நீக்கி உள்ளது. மேலும், 7947 பக்கங்கள், 110 குரூப்கள் ஆகியவற்றை நீக்கியுள்ளது.

இவை ஒருங்கிணைந்து விதிகளை மீறும் வகையில் செயல்பட்ட காரணத்துக்காக பேஸ்புக் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அக்டோபர் மாதத்தில் பேஸ்புக் 14 நெட்வொர்க்குகளை சேர்ந்த அக்கவுண்ட்கள், பக்கங்கள் மற்றும் குரூப்களை அதிரடியாக நீக்கியது.

facebook,deleted,thousands accounts,internationally ,பேஸ்புக், நீக்கப்பட்டது, ஆயிரக்கணக்கான கணக்குகள், சர்வதேச அளவில்

இதில் எட்டு நெட்வொர்க்குகள் ஜார்ஜியா, மியான்மர், உக்ரைன் மற்றும் அசர்பைஜான் நாடுகளை சேர்ந்தவை ஆகும். இவை அந்தந்த நாடுகளில் உள்ள பயனர்களை குறிவைத்து தவறான தகவல்களை பரப்புவது, விதிகளை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மற்ற ஆறு நெட்வொர்க்குகள் ஈரான், எகிப்து, அமெரிக்கா, மெக்சிகோ சார்ந்து செயல்பட்டு வந்தன. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் உள்ள போலியான அக்கவுண்ட்களை நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பேஸ்புக் நிறுவனமும் பல அதிரடி நடவடிக்கைகளை கையாள உள்ளது.

Tags :