Advertisement

ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 304 குறைந்தது!

By: Monisha Thu, 17 Sept 2020 4:28:16 PM

ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 304 குறைந்தது!

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் தங்கம் விலை 30 ஆயிரத்தில் இருந்து சற்றென 40 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு தற்போது தங்கம் விலை சிறிது சிறிதாக குறைந்து 39 ஆயிரத்திற்கு கீழ் வந்துள்ளது.

gold,silver,price,investment,dollars ,தங்கம்,வெள்ளி,விலை,முதலீடு,டாலர்கள்

இந்நிலையில், தங்கம் விலை கடந்த 3 நாட்களாக குறைந்தபடியே இருக்கிறது. நேற்று பவுன் ரூ. 39 ஆயிரத்து 576-க்கு விற்கப்பட்டது. இன்றும் தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது.

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 304 குறைந்தது. பவுன் ரூ. 39 ஆயிரத்து 272-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ. 38 சரிந்து ரூ. 4,909 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 1,200 குறைந்து ரூ. 69 ஆயிரத்து 800-க்கு விற்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 69.80 ஆக உள்ளது.

Tags :
|
|
|