Advertisement

தங்கம் விலை பவுனுக்கு ரூ.48 குறைந்தது!

By: Monisha Thu, 08 Oct 2020 2:27:09 PM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.48 குறைந்தது!

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் தங்கம் விலை 30 ஆயிரத்தில் இருந்து சற்றென 40 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு தற்போது தங்கம் விலை சிறிது சிறிதாக குறைந்து 39 ஆயிரத்திற்கு கீழ் வந்துள்ளது.

gold,silver,price,stock exchange,real estate ,தங்கம்,வெள்ளி,விலை,பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட்

தங்கம் விலையில் சில நாட்களாகவே ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் கிராம் ரூ.4,806 ஆகவும் சவரன், ரூ.38,448-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று தங்கம் விலையில் குறைவு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை பவுனுக்கு ரூ.48 குறைந்து ரூ.38,400-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.4,800 ஆக இருக்கிறது.

சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிலோ ரூ.63900-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 63.90 ஆக உள்ளது.

Tags :
|
|
|