Advertisement

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் குறைந்தது

By: Monisha Tue, 13 Oct 2020 3:34:46 PM

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் குறைந்தது

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்கள் முன்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் 30 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை சற்றென 40 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு தற்போது தங்கம் விலை சிறிது சிறிதாக குறைந்து 39 ஆயிரத்திற்கு கீழ் வந்துள்ளது.

gold,silver,price,investment,stock market,real estate ,தங்கம்,வெள்ளி,விலை,முதலீடு,பங்குச்சந்தை,ரியல் எஸ்டேட்

இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 865 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து 66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|
|
|