Advertisement

தங்கம் விலை மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டி விற்பனை

By: Monisha Tue, 15 Dec 2020 3:22:17 PM

தங்கம் விலை மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டி விற்பனை

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்கள் முன்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. பின்னர் தங்கம் விலை சில வாரங்களுக்கு முன்பு குறைந்தபடி இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக விலை உயர்ந்தபடியே இருந்து வருகிறது.

gold,investment,price,silver,rise ,தங்கம்,முதலீடு,விலை,வெள்ளி,உயர்வு

கடந்த 3-ம் தேதி தங்கம் பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. பின்னர் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்து காணப்பட்டது. நேற்று பவுன் விலை ரூ.37 ஆயிரத்து 256 ஆக இருந்தது.

இந்நிலையில் இன்று தங்கம் பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் இன்று காலை தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.144 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 32-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.4,629 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.67 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|
|
|