Advertisement

தங்கம் ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 800-க்கு விற்பனை

By: Monisha Wed, 25 Nov 2020 1:52:10 PM

தங்கம் ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 800-க்கு விற்பனை

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்கள் முன்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

தங்கம் விலையில் சில வாரங்களாக ஏற்றத்தாழ்வு காணப்பட்டு வந்த நிலையில் கடந்த 21-ந்தேதி பவுன் மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின் விலையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டு வருகிறது. இன்று 3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.864 குறைந்து ரூ.37 ஆயிரத்து 120-க்கு விற்றது.

gold,silver,price,stock exchange,real estate ,தங்கம்,வெள்ளி,விலை,பங்குச்சந்தை,ரியல் எஸ்டேட்

இந்தநிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.320 குறைந்தது. இதனால் தங்கம் விலை ரூ.37 ஆயிரத்துக்குள் வந்தது. இன்று காலை தங்கம் பவுன் ரூ.36 ஆயிரத்து 800-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.40 குறைந்து 4 ஆயிரத்து 600 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து 3-வது நாளாக குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.64 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.20-க்கு விற்கிறது.

Tags :
|
|
|