Advertisement

தங்கம் ஒரு பவுன் ரூ.37,976-க்கு விற்பனை

By: Monisha Thu, 19 Nov 2020 2:45:42 PM

தங்கம் ஒரு பவுன் ரூ.37,976-க்கு விற்பனை

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்கள் முன்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் காணப்பட்டு வந்தது. சில நாட்களுக்கு முன்பு தங்கம் பவுனுக்கு மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின்னர் விலை ரூ.38 ஆயிரத்துக்கு மேலேயே இருந்து வந்த நிலையில் 3 நாட்களாக விலை சரிந்து, இன்று தங்கம் பவுன் ரூ.38 ஆயிரத்துக்குள் வந்திருக்கிறது. 3 நாட்களில் பவுனுக்கு ரூ.592 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

gold,silver,price,investment,stock market ,தங்கம்,வெள்ளி,விலை,முதலீடு,பங்குச்சந்தை

தங்கம் விலை இன்று தொடர்ந்து 3-வது நாளாக குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.192 குறைந்து, ரூ.38,240-க்கு விற்றது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.264 குறைந்து ரூ.37,976-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.33 குறைந்து, ரூ.4,747 ஆக உள்ளது.

அதே போல் வெள்ளி விலையும் அதிகளவில் குறைந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.66,700 ஆக உள்ளது ஒரு கிராம் வெள்ளி 66.70-க்கு விற்கிறது.

Tags :
|
|
|