Advertisement

வரும் 17ம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகிறது கூகுள் நிறுவன பிக்சல் 4ஏ 5ஜி ஸ்மார்ட்போன்

By: Nagaraj Sat, 03 Oct 2020 09:17:15 AM

வரும் 17ம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகிறது கூகுள் நிறுவன பிக்சல் 4ஏ 5ஜி ஸ்மார்ட்போன்

வரும் 17ம் தேதி அறிமுகமாகிறது... கூகுள் நிறுவனத்தின் சமீபத்தைய ஸ்மார்ட்போனான பிக்சல் 4ஏ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் அறிமுகம் ஆனது. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாகாது என கூகுள் கூறி இருந்த நிலையில் இந்தியாவில் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் அக்டோபர் 17 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஆனது 5.81 இன்ச் 1080×2340 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வசதியினைக் கொண்டுள்ளது.

octacore,snapdragon,730g processor,fast charging ,ஆக்டாகோர், ஸ்னாப்டிராகன், 730ஜி பிராசஸர், பாஸ்ட் சார்ஜிங்

மேலும் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் அட்ரினோ 618 GPU வசதி கொண்டதாகவும் உள்ளது. டைட்டனம் எம் செக்யூரிட்டி சிப் மற்றும் 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 12.2 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வசதியினைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டுள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5எம்எம் ஆடியோ ஜாக், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 3140 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டதாகவும் உள்ளது.

Tags :