Advertisement

ஹூவாமி நிறுவனத்தின் செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!

By: Monisha Thu, 19 Nov 2020 6:14:13 PM

ஹூவாமி நிறுவனத்தின் செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!

ஹூவாமி நிறுவனம் செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வாட்ச் டைட்டானியம் கொண்டு உருவான வட்ட வடிவ டையல் பிரேம் மற்றும் லெதர் ஸ்டிராப் கொண்டிருக்கிறது.

இதுதவிர எஸ்பிஒ2 இரத்தத்தில் உள்ள காற்றின் அளவு, இதய துடிப்பு மற்றும் மன அழுத்தத்தை டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது. வாட்ச் அம்சங்களை இயக்க மூன்று பட்டன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வாட்ச் 30 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

ஹூவாமியின் புதிய செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் விலை 349 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 25,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வாட்ச் லெதர் பிரவுன் ஸ்டிராப் என ஒற்றை வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கிறது.

huami company,smartwatch,leather strap ,ஹூவாமி நிறுவனம்,ஸ்மார்ட்வாட்ச்,லெதர் ஸ்டிராப்

ஹூவாமி செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள்

- 1.39 இன்ச் 454x454 AMOLED டிஸ்ப்ளே
- 5ஏடிஎம் வாட்டர் ப்ரூப் வசதி
- எஸ்பிஒ2
- இதய துடிப்பு சென்சார்
- டைட்டானியம் அலாய் பாடி
- 40 கிராம் எடை
- 340 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.
- வயர்லெஸ் மேக்னெடிக் சார்ஜர்

Tags :