Advertisement

ஹூவாமி பிராண்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம்!

By: Monisha Mon, 13 July 2020 6:01:05 PM

ஹூவாமி பிராண்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம்!

ஹூவாமி பிராண்டு அமேஸ்ஃபிட் பிப் எஸ் ஸ்மார்ட்வாட்ச் கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய லைட் எடிஷன் இந்தியாவில் ஜூலை 29 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கென ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்மார்ட்வாட்ச் டீசர் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. டீசர்களின் படி புதிய ஸ்மார்ட்வாட்ச் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது.

அமேஸ்ஃபிட் பிப் எஸ் மாடல் விலை இந்தியாவில் ரூ. 4999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் மாடல் விலை ரூ. 3499 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

huawei brand,amazfit pip s,smartwatch ,ஹூவாமி பிராண்டு,அமேஸ்ஃபிட் பிப் எஸ்,ஸ்மார்ட்வாட்ச்

புதிய பிப் எஸ் லைட் மாடல் தோற்றத்தில் பார்க்க ஒரே மாதிரி காட்சியளிக்கிறது. இதன் எடை 30 கிராம் ஆகும். இதில் எட்டு ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய பிப் எஸ் லைட் மாடல் சார்கோல் பிளாக், ஆக்ஸ்ஃபோர்டு புளூ மற்றும் சகுரா பின்க் நிறங்களில் கிடைக்கிறது.

அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் விலை மற்றும் விற்பனை விவரங்கள் ஜூலை 29 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

Tags :