Advertisement

எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்!

By: Monisha Sat, 07 Nov 2020 7:30:18 PM

எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்!

எல்ஜி நிறுவனம் தனது ரோலபில் ஸ்மார்ட்போனிற்கான பெயரை ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்து இருக்கிறது. ரோலபில் ஸ்மார்ட்போனிற்கு எல்ஜி ஸ்லைடு எனும் பெயரை பயன்படுத்த விண்ணப்பித்து இருக்கிறது. எல்ஜி நிறுவனத்தின் புதிய ரோலபில் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் எல்ஜி எக்ஸ்புளோரர் பிராஜக்ட் திட்டத்தின் கீழ் உருவான இரண்டுவாது மாடல் என கூறப்படுகிறது. எல்ஜி ஸ்லைடு மற்றும் எல்ஜி ரோலபில் இரு வெவ்வேறு மாடல்களாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி எல்ஜி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

lg company,smartphone,slide,indian market,explorer ,எல்ஜி நிறுவனம்,ஸ்மார்ட்போன்,ஸ்லைடு,இந்திய சந்தை,எக்ஸ்புளோரர்

முந்தைய தகவல்களின் படி எல்ஜி ரோலபில் ஸ்மார்ட்போன் பிராஜக்ட் பி திட்டத்தில் உருவாகி வருவதாக கூறப்பட்டு இருந்தது. பிராஜக்ட் பி திட்டத்தின் கழ் உருவாகும் ஸ்மார்ட்போனிற்கு எல்ஜி ரோல், டபுள் ரோல், டூயல் ரோல், பை ரோல் மற்றும் ரோல் கேன்வாஸ் போன்ற பெயர்களை பயன்படுத்தவும் பெயர் பதிவு செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

எல்ஜி எக்ஸ்புளோரர் திட்டத்தின் கீழ் உருவான முதல் ஸ்மார்ட்போனாக எல்ஜி விங் மாடல் ஸ்வைவெல் ரக ஸ்கிரீன அமைப்புடன் வெளியானது. சமீபத்தில் இந்த மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|