Advertisement

கேலக்ஸி எஸ்21 மாடல் பற்றிய தகவல் இணையதளத்தில் லீக்!

By: Monisha Thu, 22 Oct 2020 6:20:10 PM

கேலக்ஸி எஸ்21 மாடல் பற்றிய தகவல் இணையதளத்தில் லீக்!

சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் வழக்கத்தை விட முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி எஸ்21 மாடல் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-G9910 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மாடலுடன் 25 வாட் பாஸ்ட் சார்ஜர் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் வியட்நாமில் உள்ள தாய் நுயென் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிய பிளாக்ஷிப் சீரிஸ் பற்றி வெளியாகி இருக்கும் முக்கிய விவரமாக இது பார்க்கப்படுகிறது.

samsung,galaxy s21,blackship,smartphones,fast charger ,சாம்சங்,கேலக்ஸி எஸ்21,பிளாக்ஷிப்,ஸ்மார்ட்போன்கள்,பாஸ்ட் சார்ஜர்

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி எஸ்21 மாடலில் 3880 எம்ஏஹெச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் 875 சிப்செட் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய ஸ்னாப்டிராகன் பிராசஸர் டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற இருக்கும் குவால்காம் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்களில் 108 எம்பி பிரைமரி கேமரா சேர்த்து மொத்தம் ஐந்து லென்ஸ், 1440 பிக்சல் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடல் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 60 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கும் என தெரிகிறது.

Tags :