Advertisement

புதிய இன் சீரிஸ் மாடல்களின் விலை குறித்த தகவல்!

By: Monisha Thu, 22 Oct 2020 6:20:20 PM

புதிய இன் சீரிஸ் மாடல்களின் விலை குறித்த தகவல்!

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்க இன் எனும் புதிய பிராண்டை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. புதிய இன் பிராண்டிங் ஸ்மார்ட்போன் மாடல்களுடன் விரைவில் களமிறங்க இருக்கிறது.

புதிய இன் சீரிஸ் மாடல் மலிவு விலையில் கிடைக்கும் என அதன் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஷர்மா தெரிவித்தார். தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய இன் சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 7 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

micromax,in brand,price,smartphone ,மைக்ரோமேக்ஸ்,இன் பிராண்ட்,விலை,ஸ்மார்ட்போன்

மேலும் புதிய இன் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தீபாவளிக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலத்தில் பல்வேறு புதிய மாடல்கள் வெளியாக இருக்கின்றன. அந்த வரிசையில் தற்சமயம் மைக்ரோமேக்ஸ் இணைய இருக்கிறது.

Tags :
|