Advertisement

இந்தியாவில் அறிமுகம் ஆனது ஹூவாமியின் அமேஸ்பிட் பிப் யு வாட்ச்

By: Nagaraj Sat, 17 Oct 2020 6:02:43 PM

இந்தியாவில் அறிமுகம் ஆனது ஹூவாமியின் அமேஸ்பிட் பிப் யு வாட்ச்

இந்தியாவில் அறிமுகம் ஆனது... ஹூவாமி நிறுவனம் இந்தியாவில் அமேஸ்பிட் பிப் யு வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த அமேஸ்பிட் பிப் யு வாட்ச் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

இந்த வாட்ச் ஆனது 1.43 இன்ச் 320×302 பிக்சல் கலர் டிஎப்டி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. இந்த அமேஸ்பிட் வாட்ச் கால் அழைப்புகள், எஸ்.எம்.எஸ்களுக்கான நோட்டிபிகேஷன் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 60-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் கொண்டதாகவும், கூடுதல் அம்சமாக இதய துடிப்பு சென்சார் மற்றும் மன அழுத்தத்தை டிராக் செய்யும் வசதி, மூச்சு பயிற்சி அம்சம் போன்றவற்றினைக் கொண்டதாகவும் உள்ளது.

sales,india,amazonspit watch,amazon ,விற்பனை, இந்தியா, அமேஸ்பிட் வாட்ச், அமேசான்

மேலும் இது ப்ளூடூத் 5 எல்இ, மியூசிக் கண்ட்ரோல் வசதி போன்றவற்றையும் பாதுகாப்பு அம்சமாக வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியினையும் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரையில் 225 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. இந்த வாட்ச் ஆனது அமேசானில் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|