Advertisement

குறைந்த விலையில் அதிரடி அம்சம் நிறைந்த ஸ்மார்ட்போன் அறிமுகம்!

By: Monisha Sat, 05 Dec 2020 5:29:47 PM

குறைந்த விலையில் அதிரடி அம்சம் நிறைந்த ஸ்மார்ட்போன் அறிமுகம்!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ பூவா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் இன் டிஸ்ப்ளே, 8 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் டெக்னோ பூவா ஸ்மார்ட்போன் ஹை ஒஎஸ் 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் ஏஐ கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

smartphone,tecno pova,android,fast charging,magic blue ,ஸ்மார்ட்போன்,டெக்னோ பூவா,ஆண்ட்ராய்டு,பாஸ்ட் சார்ஜிங்,மேஜிக் புளூ

பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. கனெக்டிவிடிக்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டு இருக்கின்றன. டெக்னோ பூவா ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

டெக்னோ பூவா ஸ்மார்ட்போன் ஸ்பீடு பர்ப்பிள், டேசில் பிளாக் மற்றும் மேஜிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4ஜிபி + 64ஜிபி விலை ரூ. 9,999 என்றும், 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 11 ஆம் தேதி துவங்குகிறது.

Tags :