- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- ஹூவாய் நிறுவனத்தின் நோவா 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்
ஹூவாய் நிறுவனத்தின் நோவா 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்
By: Nagaraj Tue, 29 Dec 2020 8:28:00 PM
மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனம் சீனாவில் ஹூவாய் நோவா 8 ப்ரோ ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ஹூவாய் நோவா 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.72 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவினைக் கொண்டு உள்ளது. மேலும் கேமராவினைப் பொறுத்தவரை முன்பக்கத்தில் இரட்டை பஞ்ச் ஹோல் கட்அவுட் அம்சத்தினைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
கொண்டுள்ளது. மேலும் இந்த ஹூவாய் நோவா8 ப்ரோ ஸ்மார்ட்போன் கேமராவினைப்
பொறுத்தவரையில் 64 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 8 மெகா பிக்சல் இரண்டாம்
நிலை கேமரா, மற்றும் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.
ஹூவாய்
நோவா 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி, 128 ஜிபி
கொண்டதாகவும் மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி அளவினைக் கொண்டதாக
உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் மற்றும் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டு உள்ளது.