Advertisement

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையில் அதிக யூனிட்களை விற்பனை செய்த ஐபோன்!

By: Monisha Wed, 21 Oct 2020 6:50:30 PM

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையில் அதிக யூனிட்களை விற்பனை செய்த ஐபோன்!

அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை சமீபத்தில் துவங்கியது. இந்த விற்பனையின் முதல் நாளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக ஐபோன்கள் விற்பனையாகி இருப்பதாக அமேசான் தெரிவித்து இருக்கிறது. அமேசான் சிறப்பு விற்பனையின் முதல் நாள் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் நடைபெற்றது.

அமேசான் சிறப்பு விற்பனையில் ஐபோன் 11 மாடல் ரூ. 47,999 எனும் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த சிறப்பு விற்பனை இன்று வரை நடைபெறுகிறது. விற்பனையில் இம்முறை கடந்த ஆண்டை விட அதிகளவு வரவேற்பு கிடைத்து இருப்பதாக அமேசான் தெரிவித்து உள்ளது.

amazon,great indian festival,sales,iphone,smartphones ,அமேசான்,கிரேட் இந்தியன் பெஸ்டிவல்,விற்பனை,ஐபோன்,ஸ்மார்ட்போன்கள்

சிறப்பு விற்பனையில் அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்கள், பெரிய மின்சாதனங்கள் மற்றும் நுகர்வோர் மின்சாதனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதில் ஆப்பிள், சாம்சங், ஒன்பிளஸ் மற்றும் சியோமி நிறுவனங்கள் அதிக யூனிட்களை விற்பனை செய்திருக்கின்றன.

ஸ்மார்ட்போன்களை பொருத்தவரை ஐபோன் 11, ரெட்மி நோட் சீரிஸ், ரெட்மி 9ஏ, ஒன்பிளஸ் 8டி, நார்டு மற்றும் சாம்சங் எம்31 உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கின்றன.

Tags :
|
|
|