Advertisement

மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரிப்பு

By: Nagaraj Sun, 01 Nov 2020 4:48:12 PM

மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரிப்பு

மீண்டும் விற்பனை அதிகரிப்பு... மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,371.6 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பயணிகள் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காரணமாக கடந்த ஜூன் காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்துக்கு ரூ.249.4 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

அதேசமயம் கடந்த சில மாதங்களாக லாக்டவுன் விதிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளதால் மாருதி சுசுகி நிறுவனம் மீண்டும் லாப பாதைக்கு திரும்பியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் லாபம் ஈட்டியுள்ளது.

sales,percentage,cars,maruti suzuki,india,revenue ,விற்பனை, சதவீதம், கார்கள், மாருதி சுசுகி, இந்தியா, வருவாய்

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,371.6 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 1 சதவீதம் அதிகமாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் நிகர லாபமாக ரூ.1,358.6 கோடி ஈட்டியிருந்தது.

2020 செப்டம்பர் காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் வருவாய் 10.4 சதவீதம் அதிகரித்து ரூ.18,744.5 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் அந்நிறுவனம் அந்த காலாண்டில் உள்நாட்டில் 3.70 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது.

22,511 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. உள்நாட்டில் அந்நிறுவனத்தின் விற்பனை 18.6 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|