Advertisement

மேடோரோலாவின் எட்ஜ் பிளஸ் இந்தியாவுக்கு வருது; செம சிறப்பம்சங்களுடன்

By: Nagaraj Sat, 16 May 2020 4:02:15 PM

மேடோரோலாவின் எட்ஜ் பிளஸ் இந்தியாவுக்கு வருது; செம சிறப்பம்சங்களுடன்

மேடோரோலாவின் புதிய அறிமுகம் இந்தியாவில் மே 19-ம் தேதி மோடோரோலா எட்ஜ் பிளஸ் (Motorola Edge Plus ) வெளியாக உள்ளது. கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன் மோடோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் வரிசையில் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

பிளிப்கார்ட் தளத்தில் வெளியாகியுள்ள டீசரில் இந்த ஸ்மார்போனின் விற்பனை நாள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 19-ம் தேதி 12 மணி முதல் இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது. இதற்கான விளம்பரம் வெளியான போதும் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

ஆனால் அமெரிக்காவில் இந்திய மதிப்பில் 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஐப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிங்கிள் சிம் கொண்ட இதில் டிஸ்பிளே வளையும் தன்மையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

motorola,new introduction,information,price,on 19th ,மோடோரோலா, புதிய அறிமுகம், தகவல்கள், விலை, 19ம் தேதி

ஆண்ட்ராய்ட் 10-ல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 6.7 இண்ட் எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது.

இதில் 108 மெகா பிக்ஸ்சல் முதன்மை கேமரா உள்ளது. செல்பி கேமராவில் 25 மெகா பிக்ஸ்சல் திறன் உள்ளது. இதில் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் ஆப்டிகல் வசதி அடங்கியுள்ளது. 5,000mAh பேட்டரி மற்றும் 18w விரைவாக சார்ஜ் ஏறக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் விரல்ரேகை சென்சார் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ மற்றும் புகைப்படங்களை சேமிக்க சிறப்பான ஸ்டோரேஜ் வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் 256ஜிபி அதிகரிக்க முடியாத ஸ்டோரேஜ் மற்றும் 3.0 யுஎப்எஸ் ஸ்டோரேஜ் அடங்கியுள்ளது. மற்ற தகவல்கள் எல்லாம் இன்னும் வெளியிடப்படவில்லை.

Tags :
|