Advertisement

புதிய ரேசர் 2 மாடலை வெளியிட மோட்டோரோலா நிறுவனம் திட்டம்!

By: Monisha Wed, 29 July 2020 5:47:50 PM

புதிய ரேசர் 2 மாடலை வெளியிட மோட்டோரோலா நிறுவனம் திட்டம்!

மோட்டோரோலா நிறுவனத்தின் 2020 ரேசர் ஸ்மார்ட்போன் விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. ஒடிசி எனும் குறியீட்டு பெயரில் உருவாகி இருக்கும் மோட்டோ ரேசர் 2 தோற்றத்தில் முந்தைய மாடல் போன்றே காட்சியளிக்கிறது.

மோட்டோரோலாவின் முதல் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலான ரேசர் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. வடிவமைப்பில் கோளாறுகள் நிறைந்து இருந்ததே இதற்கு காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில், இதே வடிவமைப்பில் மாற்றங்கள் செய்து புதிய ரேசர் 2 மாடலை வெளியிட மோட்டோரோலா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

motorola company,razr 2,smartphone,camera,android 10 os ,மோட்டோரோலா நிறுவனம்,ரேசர் 2,ஸ்மார்ட்போன்,கேமரா,ஆண்ட்ராய்டு 10 ஒஸ்

புதிய மோட்டோரோலா ரேசர் மாடல் எக்ஸ்டி2071-4 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. மேலும் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 2845 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் எக்ஸ்52 மோடெம் மூலம் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.

முந்தைய மாடலின் கேமரா சிறப்பானதாக இல்லை என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், புதிய ரேசர் 2 மாடலில் 48 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 ஒஸ் வழங்கப்படும் என்றும் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே குவிக் வியூ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

Tags :
|
|