Advertisement

இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் க்ளோவர் ஸ்மார்ட்போன்

By: Nagaraj Mon, 31 Aug 2020 08:27:20 AM

இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் க்ளோவர் ஸ்மார்ட்போன்

இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் க்ளோவர் ஸ்மார்ட்போன் அதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது மிட் ரேன்ஜ் மாடலை ஒன்பிளஸ் நார்டு என்ற பெயரில் வெளியிட்டு உள்ளது. ஒன்பிளஸ் க்ளோவர் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். ஒன்பிளஸ் க்ளோவர் 6.52 இன்ச் 1560×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் அளவினைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

மேலும் இது அட்ரினோ 610 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது, மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

india,oneplus,clover smartphone,battery,audio ,இந்தியா, ஒன்பிளஸ், க்ளோவர் ஸ்மார்ட்போன், பேட்டரி, ஆடியோ

மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் டூயல் சிம் ஸ்லாட் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார், 16 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டதாகவும் மேலும் பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி கொண்டுள்ளது. மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

Tags :
|