Advertisement

ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிப்பு

By: Monisha Fri, 27 Nov 2020 4:36:51 PM

ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிப்பு

இந்தியாவில் ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒப்போ எப்17, ஏ15, ஏ12 மற்றும் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

இம்முறை ஒப்போ ஸ்மார்ட்போன்கள் விலை அதிகபட்சம் ரூ. 2 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சந்தையில் ஏற்கனவே அமலாகி விட்டது.

விலை குறைப்பின் படி ஒப்போ எப்17 ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 18,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

oppo company,smartphone,price,india ,ஒப்போ நிறுவனம்,ஸ்மார்ட்போன்,விலை,இந்தியா

ஒப்போ எப்17 சீரிஸ் ஒரு வேரியண்ட்டிற்கு மட்டுமே விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் 2 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 9,490 விலையில் இருந்து தற்சமயம் ரூ. 8,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 1000 விலை குறைக்கப்பட்டு ரூ. 9990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ. 9490 விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒப்போ ஏ12 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் தற்சமயம் ரூ. 8990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|