Advertisement

பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்; கூகுள் அறிவிப்பு

By: Monisha Thu, 01 Oct 2020 5:42:04 PM

பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்; கூகுள் அறிவிப்பு

கூகுள் நிறுவனம் பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4ஏ 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. எனினும், இவை இந்தியாவில் வெளியாகாது என கூகுள் அறிவித்தவிட்டது. ஆனால் தற்போது, பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என கூகுள் தெரிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

ட்விட்டரில் பயனர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த கூகுள், இந்தியாவில் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் அக்டோபர் 17 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் சமூக வலைதளம் மற்றும் வலைதள பக்கங்களில் எந்த தகவலையும் வழங்கவில்லை.

google company,pixel 4a 5g,smartphone,highlights,twitter ,கூகுள் நிறுவனம்,பிக்சல் 4ஏ 5ஜி,ஸ்மார்ட்போன்,சிறப்பம்சங்கள்,ட்விட்டர்

கூகுள் பிக்சல் 4ஏ சிறப்பம்சங்கள்
- 5.81 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- டைட்டனம் எம் செக்யூரிட்டி சிப்
- 6 ஜிபி LPDDR4X ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 10
- 12.2 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS, EIS
- 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.0
- டூயல் சிம் ஸ்லாட்
- கைரேகை சென்சார்
- 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 3140 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Tags :