Advertisement

ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனின் விலை அறிவிப்பு

By: Monisha Fri, 11 Sept 2020 5:45:24 PM

ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனின் விலை அறிவிப்பு

இந்தியாவில் ஒப்போ நிறுவனம் கடந்த வாரம் எஃப்17 மற்றும் எஃப்17 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ஒப்போ எஃப்17 ப்ரோ விலை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, இரு 2 எம்பி மோனோ கேமராக்கள், 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போன் நேவி புளூ, கிளாசிக் சில்வர் மற்றும் டைனமிக் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 17,990 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

india,oppo company,f17 pro,smartphone,price ,இந்தியா,ஒப்போ நிறுவனம்,எஃப்17 ப்ரோ,ஸ்மார்ட்போன்,விலை

ஒப்போ எஃப்17 சிறப்பம்சங்கள்
- 6.4 இன்ச் 2400×1080 பிக்சல் 20:9 FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR4x ரேம்
- 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- கலர் ஒஎஸ் 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 16 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
- 8 எம்பி 119.9° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 2 எம்பி மோனோ லென்ஸ், f/2.4
- 2 எம்பி மோனோ லென்ஸ், f/2.4
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 4015 எம்ஏஹெச் பேட்டரி
- 30 வாட் வூக் ஃபிளாஷ் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

Tags :
|