Advertisement

இன்று தங்கம் விலை குறைந்தது...ஒரு பவுன் ரூ.39,560-க்கு விற்பனை

By: Monisha Wed, 16 Sept 2020 11:59:47 AM

இன்று தங்கம் விலை குறைந்தது...ஒரு பவுன் ரூ.39,560-க்கு விற்பனை

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் தங்கம் விலை 30 ஆயிரத்தில் இருந்து சற்றென 40 ஆயிரத்தை தாண்டியது. தன்பிறகு தற்போது தங்கம் விலை சிறிது சிறிதாக குறைந்து 39 ஆயிரத்திற்கு கீழ் வந்துள்ளது.

gold,silver,price,investment,stock market ,தங்கம்,வெள்ளி,விலை,முதலீடு,பங்குச்சந்தை

இந்நிலையில், தங்கம் விலையில் சில நாட்களாகவே ஏற்றதாழ்வு காணப்பட்டு வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.39,680-க்கும், கிராம் ரூ.4,960-க்கும் விற்றது. இதனால் தங்கம் பவுனுக்கு மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டும் என்று கருதப்பட்டது.

ஆனால் இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.39,560-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,945 ஆக உள்ளது.

அதே போல் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.71 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.71 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Tags :
|
|
|