Advertisement

பட்ஜெட் ரக 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ரியல்மி!

By: Monisha Tue, 17 Nov 2020 08:25:35 AM

பட்ஜெட் ரக 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ரியல்மி!

ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில், ரியல்மி பிராண்டின் புதிய எக்ஸ்7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 2021-ல் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என தெரிவித்து இருக்கிறார்.

இந்திய சந்தையில் முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை ரியல்மி பிராண்டு அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து ரியல்மி பிராண்டு பட்ஜெட் ரக 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய 5ஜி மாடல்கள் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய மாடல்கள் தவிர ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் 2021 ஆண்டின் முதல் சில மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

realme india,x7 series,smartphone,indian market,highlights ,ரியல்மி இந்தியா,எக்ஸ்7 சீரிஸ்,ஸ்மார்ட்போன்,இந்திய சந்தை,சிறப்பம்சங்கள்

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ மாடலின் சிறப்பம்சங்கள்
- 6.55 இன்ச் AMOLED FHD+ டிஸ்ப்ளே
- 2400x1080 பிக்சல் ரெசல்யூஷன்
- மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் சிப்செட்
- அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 10
- ரியல்மி யுஐ கஸ்டம் ஒஎஸ்
- 64 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 2 எம்பி மேக்ரோ சென்சார்
- 32 எம்பி செல்பி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி

Tags :