Advertisement

ரியல்மி நிறுவனத்தின் அல்ட்ராடார்ட் பிளாஷ் சார்ஜர் அறிமுகம்!

By: Monisha Thu, 01 Oct 2020 5:47:49 PM

ரியல்மி நிறுவனத்தின் அல்ட்ராடார்ட் பிளாஷ் சார்ஜர் அறிமுகம்!

ரியல்மி நிறுவனம் தனது 125 வாட் பாஸ்ட் சார்ஜர் மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. ரியல்மி இந்தியா மற்றும் ஐரோப்பாவுக்கான தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் புதிய பாஸ்ட் சார்ஜருக்கான டீசரை தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.

ஜூலை மாதத்தில் ரியல்மி நிறுவனம் 125வாட் அல்ட்ரா டார்ட் பிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இது 4000 எம்ஏஹெச் பேட்டரியை 33 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. தற்சமயம் ரியல்மி நிறுவனம் 65 வாட் சூப்பர்டார்ட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்குகிறது.

realme company,fast charger,technology,ultradart,flash charging ,ரியல்மி நிறுவனம்,பாஸ்ட் சார்ஜர்,தொழில்நுட்பம்,அல்ட்ராடார்ட்,பிளாஷ் சார்ஜிங்

முதற்கட்டமாக 125 வாட் சார்ஜர் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய சாதனம் பற்றி இதுவரை வேறு எந்த தகவலையும் ரியல்மி வெளியிடவில்லை. ரியல்மி 125 வாட் அல்ட்ரா டார்ட் பிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பம் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அதிவேகமாக சார்ஜ் செய்ய வழி செய்யும் நோக்கில் வெளியிடப்பட்டு உள்ளது.

புதிய 125 வாட் அல்ட்ராடார்ட் பிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பம் 4000 எம்ஏஹெச் பேட்டரியை 20 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். டெம்ப்பரேச்சர் கண்ட்ரோல் இன்றி இந்த தொழில்நுட்பம் 100 சதவீத சார்ஜ் செய்ய 13 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.

Tags :