Advertisement

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மீண்டும் விலை குறைப்பு

By: Monisha Fri, 28 Aug 2020 6:02:29 PM

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மீண்டும் விலை குறைப்பு

இந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு ரெட்மி கே20 ப்ரோ 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட்டிற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த விலை குறைப்பு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை உயர்த்தப்பட்டது. பின் கடந்த மாதமும் இதன் விலை குறுகிய காலக்கட்டத்திற்கு குறைக்கப்பட்டது.

புதிய விலை குறைப்பின் படி ரெட்மி கே20 ப்ரோ 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 22,999 என மாறி இருக்கிறது. முன்னதாக இதே வேரியண்ட் ரூ. 26,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் கார்பன் பிளாக், ஃபிளேம் ரெட், பியல் புளூ மற்றும் கிளேசியர் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

redmi k20 pro,features,smartphone,android,price ,ரெட்மி கே20 ப்ரோ,சிறப்பம்சங்கள்,ஸ்மார்ட்போன்,ஆண்ட்ராய்டு,விலை

ரெட்மி கே20 ப்ரோ சிறப்பம்சங்கள்
- 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 AMOLED HDR டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. LPDDR4X ரேம், 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- 8 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. சோனி IMX586 சென்சார் பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, 0.8μm பிக்சல், 6P லென்ஸ், லேசர் AF, EIS
- 8 எம்.பி. 1/4″ OV8856 டெலிபோட்டோ லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.4
- 13 எம்.பி. 1/3″ சாம்சங் S5K3L6 124.8° அல்ட்ரா-வைடு சென்சார், 1.12μm பிக்சல், f/2.4
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 0.8μm பிக்சல்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i கோட்டிங்)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 27 வாட் சோனிக் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

Tags :