Advertisement

சியோமியின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஓபன் சேல் முறையில் விற்பனை

By: Monisha Thu, 01 Oct 2020 6:02:14 PM

சியோமியின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஓபன் சேல் முறையில் விற்பனை

சியோமியின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. ஓபன் சேல் விற்பனை சியோமியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இரு மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதுவரை இந்த ஸ்மார்ட்போன் பிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ரெட்மி நோட் 9 மாடலில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, குவாட் கேமரா சென்சார்கள் மற்றும் 5020 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கின்றன.

சியோமி அதிகாரப்பூர்வ வலைதளம் மட்டுமின்றி எம்ஐ ஹோம் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,499 என்றும் டாப் எண்ட் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

xiaomi,redmi note 9,smartphone,open sale,highlights ,சியோமி,ரெட்மி நோட் 9,ஸ்மார்ட்போன்,ஓபன் சேல்,சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11 வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி 3டி கர்வ்டு பேக் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜர், 9 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags :
|