Advertisement

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

By: Monisha Mon, 07 Dec 2020 09:18:58 AM

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

petrol,diesel,price,crude oil,oil company ,பெட்ரோல்,டீசல்,விலை,கச்சா எண்ணெய்,எண்ணெய் நிறுவனம்

சென்னையில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் 86.25 ரூபாய்க்கு விற்பனையானது. டீசல் ஒரு லிட்டர் 78.97 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று, பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் அதிகரித்து 86.51 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 24 காசுகள் அதிகரித்து 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த விலை மாற்றம் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags :
|
|
|