Advertisement

சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் அதிரடி விலை குறைப்பு!

By: Monisha Wed, 11 Nov 2020 6:42:42 PM

சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் அதிரடி விலை குறைப்பு!

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை திடீரென குறைக்கப்பட்டுள்ளது. திடீர் விலை குறைப்பு நாடு முழுக்க உள்ள ஆப்லைன் விற்பனை மையங்களில் அமலாகி உள்ளது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ரூ. 69,999 எனும் துவக்க விலையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 57,100 எனும் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 25 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. விலை குறைப்பின் படி கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ரூ. 45,000 எனும் துவக்க விலையில் ஆப்லைன் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆரா பிளாக், ஆரா குளோ மற்றும் ஆரா ரெட் நிறங்களில் கிடைக்கிறது. தற்போதைய விலை குறைப்பு அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

Tags :
|