Advertisement

சுழலும் தன்மை கொண்ட வித்தியாசமான டிவி மாடலை அறிமுகப்படுத்திய சாம்சங்

By: Nagaraj Thu, 12 Nov 2020 09:15:03 AM

சுழலும் தன்மை கொண்ட வித்தியாசமான டிவி மாடலை அறிமுகப்படுத்திய சாம்சங்

வித்தியாசமான டிவி மாடல்... சாம்சங் நிறுவனம் 2020 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் முற்றிலும் வித்தியாசமான டிவி மாடலை அறிமுகம் செய்தது. இது செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் சுழலும் திரை கொண்டிருந்தது.

இந்த டிவி சிரோ என அழைக்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன் தரவுகளை டிவியில் செங்குத்தாக பார்க்கும் நோக்கில் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. புதிய சாம்சங் சிரோ மாடல் டிவி தற்சமயம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

சிரோ மாடலில் ஆல்-இன்-ஒன் ஸ்டான்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மீது 43 இன்ச் QLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனை பயனர்கள் தேவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப செங்குத்தாகவோ, கிடைமட்டமாகவோ திருப்பிக் கொள்ளலாம்.

samsung zero,rotating,sales,indian market ,சாம்சங் சிரோ, சுழலும், விற்பனை,  இந்திய சந்தை

இது வழக்கமான சாம்சங் ஸ்மார்ட் டிவி போன்றே இயங்கும். எனினும், மொபைல் தரவுகளை டிவியில் பார்க்க விரும்பும் போது திரை செங்குத்தாக திரும்பி கொள்ளும். இது செயலிகள் மற்றும் சமூக வலைதளங்களை இயக்கும் போது பயனுள்ளதாக இருக்கும்.

இந்த டிவியின் முன்புறம் 4.1 சேனல் 60வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் தலைசிறந்த பேஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஆம்பியன்ட் மோட் +, போர்டிரெயிட் மோட், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே மோட், ஆக்டிவ் வாய்ஸ் ஆம்ப்ளிபையர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.

சாம்சங் சிரோ மாடல் நேவி புளூ நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் சாம்சங் சிரோ விலை ரூ. 1,24,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags :
|