Advertisement

சாம்சங் ஸ்மார்ட்போன் மாடலுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிப்பு

By: Karunakaran Thu, 31 Dec 2020 1:52:36 PM

சாம்சங் ஸ்மார்ட்போன் மாடலுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிப்பு

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மாரட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ. 21,999 விலையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது. அறிமுகமானது முதல் பலமுறை கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி தற்சமயம் இதன் விலை ரூ. 17,999 என மாறி இருக்கிறது. இம்முறை இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது. அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைன் மட்டுமின்றி விலை குறைப்பு விற்பனை மையங்கள், சாம்சங் ஒபேரா ஹவுஸ், சாம்சங் வலைதளம் மற்றும் முன்னணி ஆன்லைன் தளங்களில் அமலாக இருக்கிறது.

price,reduction,samsung,smartphone model ,விலை, குறைப்பு, சாம்சங், ஸ்மார்ட்போன் மாடல்

இதன் சிறப்பம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ31 மாடலில் 6.4 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர், ARM மாலி-G52 GPU, 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் ப்ரிசம் கிரஷ் பிளாக், ப்ரிசம் கிரஷ் புளூ, ப்ரிசம் கிரஷ் ரெட் மற்றும் ப்ரிசம் கிரஷ் வைட் நிறங்களில் கிடைக்கிறது.

இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0, டூயல் சிம் ஸ்லாட், 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, 8 எம்பி 123° அல்ட்ரா-வைடு ஆங்கில் கேமரா, f/2.2, 5 எம்பி டெப்த் சென்சார், f/2.4, 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4, 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.


Tags :
|