Advertisement

விவோ வை91ஐ ஸ்மார்ட்போன் விலை அதிரடி குறைப்பு!

By: Monisha Wed, 04 Nov 2020 5:33:37 PM

விவோ வை91ஐ ஸ்மார்ட்போன் விலை அதிரடி குறைப்பு!

இந்தியாவில் விவோ நிறுவனம் தனது வை91ஐ ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது. புதிய விலை அந்நிறுவன வலைதளத்தில் மாற்றப்பட்டு விட்டது. இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி + 16 ஜிபி, 2 ஜிபி + 32 ஜிபி மற்றும் 3 ஜிபி + 32 ஜிபி போன்ற மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

விலை குறைப்பை தொடர்ந்து விவோ வை91ஐ மாடல் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 8490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை விவோ வலைதளம், அமேசானில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.

ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த மாடல் ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் பேஸ் மாடல் 2 ஜிபி + 16 ஜிபி மாடல் ரூ. 7490, 2 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

vivo company,y91i,smartphone,price,amazon ,விவோ நிறுவனம்,வை91ஐ,ஸ்மார்ட்போன்,விலை,அமேசான்

விவோ வை91ஐ ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஹீலியோ P22 ஆக்டா-கோர் 12 என்.எம். பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2, 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8 வழங்கப்பட்டுள்ளது.

Tags :
|
|