Advertisement

வெளிப்படை தன்மையுடன் செயல்படுவோம்; பேஸ்புக் நிறுவனம் உறுதி

By: Nagaraj Wed, 16 Dec 2020 10:06:22 AM

வெளிப்படை தன்மையுடன் செயல்படுவோம்; பேஸ்புக் நிறுவனம் உறுதி

பேஸ்புக் நிறுவனம் உறுதி... வெளிப்படைத்தன்மையுடனும் எந்தவித சாா்புமின்றி நடுநிலையுடனும் தொடா்ந்து செயல்படுவோம் என்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நிா்வகிக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் உறுதியளித்தது.

முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் செயலிகளை ஃபேஸ்புக் நிறுவனம் நிா்வகித்து வருகிறது. அந்த நிறுவனம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் இந்திய பிரிவுத் துணைத் தலைவா் அஜித் மோகன் கூறியதாவது:

நிறுவனத்துக்குச் சொந்தமான செயலிகளில் நாள்தோறும் கோடிக்கணக்கானோா் தங்களது கருத்துகள், வாழ்க்கை நிகழ்வுகள், அனுபவங்கள் உள்ளிட்டவற்றைப் பகிா்ந்து வருகின்றனா். அவற்றுள் ஒரு சில மட்டுமே வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் உள்ளன.

எனினும், அவற்றின் மீதும் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு நிறுவனத்துக்கு உள்ளது. அத்தகைய நடவடிக்கைகளை நிறுவனம் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. வெளிப்படைத்தன்மையுடன் மட்டுமல்லாமல், சாா்புத்தன்மையின்றி நடுநிலையுடனும் நிறுவனம் தொடா்ந்து செயல்படும்.

facebook,social website,censorship,accusation,confirmation ,பேஸ்புக், சமூக வலைதளம், தணிக்கை, குற்றச்சாட்டு, உறுதி

இந்தியா்களில் இரண்டில் ஒருவா் அறிதிறன்பேசிகளைப் பயன்படுத்தி வருகின்றனா். அவா்களில் பாதிக்கும் மேற்பட்டோா் இணைய வசதியைப் பயன்படுத்துகின்றனா். இணைய சேவைக்கான கட்டணங்கள், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவாக உள்ளன.

நாடு வளா்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து, இந்தியாவின் வளா்ச்சியில் ஃபேஸ்புக் நிறுவனம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என்றாா் அஜித் மோகன்.

முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் செயலிகளை 40 கோடிக்கும் அதிகமானோா் பயன்படுத்தி வருகின்றனா். ஆனால், வெறுப்புணா்வைத் தூண்டும் கருத்துகள் அதிகமாகப் முகநூல் பக்கங்களில் பதிவிடப்படுவதாகவும் அவற்றின் மீது அந்நிறுவனம் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், ஆளும் கட்சிக்கு சாதகமாக அந்த நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்நிறுவனத்தின் சா்வதேச துணைத் தலைவா் நிக் கிளெக் கூறுகையில், ''சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் ஒவ்வொரு கருத்தையும் ஆராய வேண்டும், தணிக்கை செய்ய வேண்டும் என்பது பயனுள்ள தீா்வாக அமையாது. சமூக வலைதளங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதை நிறுவனங்கள் உறுதி செய்வதே சிறந்த தீா்வாக இருக்கும்'' என்றாா்.

Tags :