Advertisement

மூன்று மாதத்தில் ரூ.2465 கோடி லாபம் ஈட்டியுள்ள விப்ரோ நிறுவனம்

By: Nagaraj Wed, 14 Oct 2020 08:59:12 AM

மூன்று மாதத்தில் ரூ.2465 கோடி லாபம் ஈட்டியுள்ள விப்ரோ நிறுவனம்

விப்ரோ நிறுவனத்தின் சாதனை... 2020 செப்டம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் ஒட்டு மொத்த லாபமாக ரூ.2,465.7 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் 4வது மிகப்பெரிய ஐ.டி.சேவைகள் நிறுவனமான விப்ரோ தனது கடந்த செப்டம்பர் காலாண்டு (2020 ஜூலை-செப்டம்பர்) நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் விப்பேரா நிறுவனத்தின் லாபம் மற்றும் வருவாய் அதிகரித்துள்ளது.

wipro,earnings,rise,3 month,shares ,விப்ரோ, வருவாய், உயர்வு, 3 மாதம், பங்குகள்

2020 செப்டம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் ஒட்டு மொத்த லாபமாக ரூ.2,465.7 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஜூன் காலாண்டைக் காட்டிலும் 3.2 சதவீதம் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் (2020 ஏப்ரல்-ஜூன்) விப்ரோ நிறுவனத்தின் ஒட்டு மொத்த லாபம் ரூ.2,390.4 கோடியாக இருந்தது.

2020 செப்டம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் 1.2 சதவீதம் உயர்ந்து ரூ.15,096.70 கோடியாக அதிகரித்துள்ளது. விப்ரோ நிறுவனம் மொத்தம் ரூ.9,500 கோடிக்கு பங்குகளை வாங்க திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று விப்ரோ நிறுவன பங்கின் விலை 0.48 சதவீதம் குறைந்து ரூ.375.75-ல் முடிவுற்றது.

Tags :
|
|