Advertisement

நாமினேஷன் பட்டியலில் சிக்கிய ஆரி மற்றும் சுரேஷ்!

By: Monisha Mon, 19 Oct 2020 12:45:13 PM

நாமினேஷன் பட்டியலில் சிக்கிய ஆரி மற்றும் சுரேஷ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்களை முடிவு செய்ய நாமினேசன் செய்யப்படும். அந்த வகையில் இன்றைய புரோமோவில், பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷன் படலத்தை ஆரம்பிக்கின்றனர்.

இந்த நாமினேஷன் படலத்தில் பெரும்பாலான போட்டியாளர்கள் ஆரியை நாமினேசன் செய்தனர். அவர் அளவுக்கு அதிகமாக அட்வைஸ் செய்ததாகவும் அதனால் நாமினேஷன் செய்வதாகவும் போட்டியாளர்கள் காரணம் தெரிவித்தனர். ஆனால் அதற்கு விளக்கம் கொடுத்த ஆரி, நான் ஆஜித் தவிர யாருக்கும் அட்வைஸ் பண்ண வில்லை என்று கூறியுள்ளார்.

big boss show,nomination,aari,suresh ,பிக்பாஸ் நிகழ்ச்சி,நாமினேஷன்,ஆரி,சுரேஷ்

ஆரியை அடுத்து சுரேஷுக்கு நாமினேசன் குவிந்தது. அவர் கொளுத்திப் போடுகிறார் என்றும் சிம்பத்தி கிரியேட் செய்கிறார் என்றும் போட்டியாளர்கள் சுரேஷ் மீது குற்றம்சாட்டினர். இந்த நிலையில் இன்றைய நாமினேஷன் பட்டியலில் ஆரி மற்றும் சுரேஷ் சிக்குவது உறுதியாகியுள்ளது.

கேப்ரில்லாவை முதுகில் சுமந்து சுரேஷ் சமீபத்தில் ஹீரோவானார் என்பதும், ஆரி இப்போதுதான் விளையாட தொடங்கியுள்ளதால் அவர் நிச்சயம் நீண்ட தூரம் செல்வார் என்றும் எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத இவர்கள் இருவர் இன்று நாமினேஷனில் சிக்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|