Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஆரி!

By: Monisha Fri, 25 Dec 2020 9:04:15 PM

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஆரி!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இறுதிப் போட்டியை நெருங்கிவிட்டது. தற்போது 82-வது நாளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ளது.

இந்த நிலையில் சற்று முன் அடுத்த வாரத்திற்கான தலைவர் யார் என்பது குறித்த டாஸ்க் வைக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில் ஆரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அடுத்த வாரம் ஆரியை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

big boss,aari,final,nomination,evict ,பிக்பாஸ்,ஆரி,இறுதிப்போட்டி,நாமினேஷன்,எவிக்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் மூன்றாவது வாரம் இறுதி போட்டி என்பதால் அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்த தப்பித்தால் ஆரி கிட்ட தட்ட இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டதாகவே கருதப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் தற்போது 9 போட்டியாளர் இருக்கும் நிலையில் இந்த வாரம் ஒருவர் எவிக்ட் செய்யப்படுவார். இதனை அடுத்து, 8 போட்டியாளர்களில் வாரம் இருவர் என வரும் இரண்டு வாரங்களில் எவிக்ட் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|
|