Advertisement

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் நடிகர் பாலாஜி முருகதாஸ் பங்கேற்பதாக தகவல்

By: Nagaraj Tue, 15 Sept 2020 08:51:41 AM

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் நடிகர் பாலாஜி முருகதாஸ் பங்கேற்பதாக தகவல்

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் நடிகர், மாடலுமான பாலாஜி முருகதாஸ் என்பவர் பங்கேற்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிக விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் அவ்வபோது வெளியாகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட ஹீரோ ரியோராஜ் கலந்து கொள்ள இருப்பது கிட்டத்தட்ட உறுதி என்று செய்திகள் வெளியானது. இதனை அடுத்து தற்போது மேலும் ஒரு தமிழ் நடிகர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.

big boss,model actor,sure,attends ,பிக்பாஸ், மாடல் நடிகர், உறுதி, கலந்து கொள்கிறார்

ஆர்கே சுரேஷ் நடித்த ’டைசன்’ என்ற படத்தில் வில்லனாக நடித்தவரும், பிரபல மாடலுமான பாலாஜி முருகதாஸ் என்பவர்தான் அவர் என்று கூறப்படுகிறது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருப்பதால் இந்த நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|