Advertisement

இந்தி படத்தின் அப்டேட்டை எளிமையாக பதிவிட்ட நடிகர் தனுஷ்

By: Nagaraj Tue, 24 Nov 2020 3:53:10 PM

இந்தி படத்தின் அப்டேட்டை எளிமையாக பதிவிட்ட நடிகர் தனுஷ்

மிக எளிமையாக தான் நடிக்கும் இந்தி படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார் நடிகர் தனுஷ்.

தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் மதிப்புமிக்க நடிகர்களில் ஒருவர் தனுஷ். அசாத்திய நடிப்புத் திறமை கொண்ட இவர், பல தேசிய விருதுகளை வாங்கியதுடன் பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதோடு மட்டும் நிற்காமல், உலக அளவில் ஹாலிவுட் படத்திலும் நடித்து விட்டார்

இந்நிலையில் நடிகர் தனுஷுக்கு மீண்டும் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதன்படி, தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகரான அக்ஷய் குமாருடன் இணைந்து நடிக்கும் அத்ராங்கி ரே என்ற படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருவதாக பதிவிட்டு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

attention,actor dhanush,simplicity,social website,photography ,கவனம், நடிகர் தனுஷ், எளிமை, சமூக வலைத்தளம், புகைப்படம்

தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது. ஆனந்த் எல் ராய் இயக்கம் இப்படத்தில் கதாநாயகியாக சாரா அலிகான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாஸ்டர் படத்திற்கான பிரம்மாண்ட டீசர், ஈஸ்வரன் திரைப்படத்திற்கான மோஷன் டீசர், மாநாடு படத்திற்கான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் என பிரபலங்களின் படங்களுக்கான அப்டேட்கள் மாஸாக சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், நடிகர் தனுஷ் மிகவும் எளிமையான புகைப்படம் ஒன்றின் வாயிலாக அப்டேட் செய்தியை பதிவிட்டிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Tags :