Advertisement

புதிய படத்திற்காக செம லுக்கில் நடிகர் சந்தானம்

By: Nagaraj Mon, 21 Dec 2020 7:41:33 PM

புதிய படத்திற்காக செம லுக்கில் நடிகர் சந்தானம்

புதிய படத்திற்காக சந்தானம் புதிய லுக்கில் இருக்கும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சந்தானம். காமெடி நடிகராக நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்‌. இவர் அடுத்ததாக ஆர்.கே.என்டெர்டெய்ன்மென்ட் சி.ரமேஷ்குமார் தயாரிப்பில், ஆர்.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்.

இப்படத்தில் அவருக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொல்லுசபா ஸ்வாமிநாதன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முதன் முறையாக சந்தானம் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளார். திரைப்படத்தை மாதவன் எடிட்டிட் செய்கிறார்.

santhanam,new film,shooting,kumbakonam,director ,சந்தானம், புதிய படம், படப்பிடிப்பு, கும்பகோணம், இயக்குநர்

இந்த புதிய படத்திற்கான படப்பிடிப்பில் கும்பகோணத்தில் இணைந்துள்ளார். கும்பகோணத்தைத் தொடர்ந்து திருச்சி, ஸ்ரீரங்கம், சென்னை உள்ளிட்டப் பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அறிமுக இயக்குநராக இணைந்துள்ளார் ஸ்ரீனிவாச ராவ்.

இவர், 'வல்லினம்' படத்தின் இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். நிறைய விளம்பரப் படங்களையும் இவர் இயக்கியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல். இந்த படத்திற்காக சந்தானத்தின் புதிய லுக் செமவைரலாகி வருகிறது.

Tags :