Advertisement

பாவாடை தாவணி காஸ்ட்யூமில் கலக்கும் நடிகை லாஸ்லியா!

By: Monisha Sun, 15 Nov 2020 5:59:39 PM

பாவாடை தாவணி காஸ்ட்யூமில் கலக்கும் நடிகை லாஸ்லியா!

நடிகை லாஸ்லியா தீபாவளி ஸ்பெஷலாக பாவாடை தாவணி காஸ்ட்யூமில் புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக இருந்தவர் லாஸ்லியா. இவர் இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழின் அடிப்படையில் தற்போது கோலிவுட்டில் இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவராகிய ஆரி நடித்து வரும் ஒரு படத்திலும் பிரபல கிரிக்கெட் வீர்ர் ஹர்பஜன்சிங், ஆக்சன்கிங் அர்ஜூன் இணைந்து நடித்து வரும் 'ப்ரெண்ட்ஷிப்' என்ற படத்திலும் லாஸ்லியா நடித்து வருகிறார்.

actress,laslia,diwali,special,photos ,நடிகை,லாஸ்லியா,தீபாவளி,ஸ்பெஷல்,புகைப்படங்கள்

இந்த நிலையில் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் தனது அழகிய மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வரும் நிலையில் தீபாவளி ஸ்பெஷலாக பாவாடை தாவணி காஸ்ட்யூமில் ஒரு போட்டோஷூட் எடுத்து அதன் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

கழுத்தில் நெக்லஸ், இடுப்பில் ஒட்டியாணம், கைநிறைய வளையல், தலைநிறைய மல்லிகை,முகத்தில் புன்சிரிப்பு, பாவாடை தாவணி காஸ்ட்யூமில் அசல் தமிழ்ப்பெண் போல் காட்சியளிக்கும் லாஸ்லியாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|
|